இணைதயத்தில் வாழும் எம் தமிழ்

என்ன இல்லை இணையத்தில்;
கடவுளை கூட கண்டுவிடலாம்
சுலபத்தில்; அந்த நாள் இல்லை
வெகு தூரத்தில்

இணையத்தில்தமிழ் புகுந்து;
இமயத்தில் தமிழ் புகழ் வகுந்து;
அதிலும் தமிழர் இதயம் நிறைந்து;
திக்கெட்டும் ஓடவிட்டு வழிந்து;
வாழும் இணைய தமிழ் செழிந்து.

உலகை ஒன்றாய் குவித்து;
காற்றில் தூற்றி பதற்றத்தை
ஒதுக்கி; மாறாததை மாற்றி;
சேராததைச் சேர்த்து;
கூறாததைக் கூறி;
வாராததை வரவழைத்து;
நுகராததை நுகரவைத்து;
அமைக்கும் அமைப்பே
இணையம் எனலாமே

காகித சாம்ராஜியத்தை தன்
கைக்குள் அடக்கி; இயல் இசை நாடக தமிழை பாமறன்
கையில்கொடுத்து; அதை தன்
நெஞ்சில் வைக்க வைத்த இணையதளம்

வகை வகையாய்
பிரகாசிக்கச் செய்து;
தமிழ் வளர்ச்சி
அறிவிற்கு மறுமலர்ச்சி;
காதுகளில் ஒலிக்க
மனதிற்கு குளிர்ச்சி.

உலகத்தை இணைக்க இணையதளம்; அதில் தமிழ்
தாண்டவமாடுவதே தமிழுக்கும்
தமிழர் களுக்கும் பெருமை.

சரியாக சொல்ல வேண்டுமானால்
ஒரவர் ஒரு சிக்கலில் சிக்கிக்கிக்கி திக்கு முக்காடும் தருணத்தில்
அந்த சிக்கலான சிக்கலை ஒரு சிக்கலின்றி எடுத்திவிட உதவும் தமிழ் இணையம்

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி mumbai (18-Jun-16, 2:31 pm)
பார்வை : 69

மேலே