கர்மா
நாம் எம்
எண்ணங்களாலும், செயல்களாலும்
விதைக்கும் நல்வினை தீவினைகளின்
பிரதி பலனே கர்மா.
இறைவன் விதியை
எழுதுபவனாக இருப்பானாகின்
அவன் எல்லோர் விதியையும்
ஒன்றாக நன்றாகத்தான் எழுதுவான்
ஏனெனில்
நாம் ஆண்டவனின் பிள்ளைகள்
உன்விதியை நன்றாகவும்,
என்விதியை துன்பமாவும் மாற்றி எழுத
அவனுக்கு என்ன தலைப்பில் விதி...
ஆண்டவன் அன்பானவன்
அருளும் இரக்கமும் நிறைந்தவன்
அவன் எப்போதும் எம்மை
துன்பத்தில் தள்ள மாட்டான்...
ஆனால் மனிதர்களாகிய நாம்
பிறவிதோறும் நாமாகவே விதைக்கும்
வினைகளின் அறுவடைகளே
நாம் பிறவிதோறும் எடுக்கும்
ஜென்மங்களும் வாழ்க்கையும் ஆகும்.
எனவே
எமது இன்ப துன்பங்களுக்கு
நமக்கு நாமே காரணம் இன்றி
இறைவனல்ல ....
இதுவே
பிரபஞ்ச விதியுமேயாம்!