உங்கள் நினைவோடு தனிமையில் நான்
தலைவலி என்றதும்... மடியில் தலை சாய்த்து.....
வருடிவிட என்னருகே தாய் நீயில்லை....
மனம் கேட்காமல் ஓடிப்போய் மருந்து..
வாங்கிட என்னருகே தந்தை நீயில்லை...
சற்று நேரத்தில் சுடுச்சோறில் தண்ணீர் வைத்து...
கஞ்சி தந்திட என்னருகே பாட்டி நீயில்லை...
எந்நிலை எண்ணி என்னை விட எனக்காக...
துடித்திட என்னருகே அக்கா நீயில்லை...
மருத்துவமனை போகலாம் மாமா என என்னோடு...
சண்டையிட என்னருகே செல்லவாண்டு நீயில்லை...
அந்த நொடியில் நலம்...
விசாரித்திட என்னருகே நண்பன் நீயில்லை...
இந்த நொடி நான் படும் துயரம்..
என்னோடு இருந்திட...
ஓர் நொடியும் நான் சொல்லிட...
மனம் விரும்பவில்லை...
தனிமையில் நான் வாடுகிறேன்...
உங்கள் நினைவோடு...