இயற்கையின் வரவேற்பு !
கத்திரி வெயிலின்
நண்பகலில்
கால்நடையாய்ப் போகும்
ஏழைகளுக்கெல்லாம்
சிகப்புப் பூப்போட்ட
பச்சைக் குடையை
விரிச்சு வச்ச மாதிரி
நிழல் பரப்பிக்
காத்திருந்தன
சாலையோரப் பூமரங்கள் !
உதிர்ந்த பூக்களால்
சிவப்புக் கம்பளம் !
உதிரும் பூக்களால்
மலர் தூவல் !
தென்றலில் அசையும்
கிளைகள் வீசின
வெண்சாமரம் !
வருக வருக என
வரவேற்பு நிகழ்த்தின
பூமரக் கிளைகளும்
இலைகளும் !