என் ஊர் ஆப்பனூர்
எங்க ஊரு ஆப்பனூரு
எங்க நீயும் வந்துபாரு
ஆதிசிவன் வந்ததாலே
ஆப்பனூரு என்ற பேரு
ஊருக்கு முன்னாலே
உயரமா ஒரு சிலை
உலகமே வணங்கும்
எங்க ஐயா தேவர்சிலை
யாருக்கும் முன்னாலே
கையை கட்டி நின்னதில்லை
யாராச்சும் வம்பு பன்ன
உயிரோட விட்டதில்லை
மழையை நம்பி நாங்க இல்லை
மலேசியா தாண்டியும் எங்க எல்லை
அகிலமெல்லாம் சென்றாலும்
அரியவள் அருளில் குறைவில்லை
ஆயிரம் வீடுகள் இங்குண்டு
அத்தனை வீடுக்கும் உறவுண்டு
எத்தனை எதிரி வந்தாலும்
எதிர்த்து நிற்க்கும் வீரமுண்டு
எல்லா சாமியும் இங்குண்டு
அல்லா சாமிக்கும் இடமுண்டு
நல்லா நீயும் வணங்கி வந்தால்
நன்மை எல்லாம் உனக்குண்டு
நல்லா நீயும் வணங்கி வந்தால்
நன்மை எல்லாம் உனக்குண்டு...