என்றும் நட்புடன் நண்பனே

நண்பனே! அழகனே!
உனக்கு வயதாகி விட்டதாகத்
தெரிவதில்லை!

முதன்முதலாக நான் பார்த்தபோது
இருந்தது போலதான் இப்பொழுதும்
இருக்கிறாய்!

மூன்று குளிர்காலம்,
மூன்று கோடைக் காலம், வசந்தகாலம்,
இலையுதிர்காலம் சென்றுவிட்டன!

முதன்முதலில் பார்த்தது போல
என்றும் நட்புடன் இளமையாகக்
காட்சியளிக்கிறாய் நீ!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-16, 10:30 pm)
பார்வை : 1552

மேலே