கடந்த நாட்கள் வந்திடுமா

கடந்த நாட்கள் வந்திடுமா
***கவலை நீங்கச் செய்திடுமா
விடலைப் பருவம் திரும்பிடுமா
***விரும்பும் வண்ணம் நிலைத்திடுமா
கடலை போட்ட நிமிடங்கள்
***கண்முன் நிழலாய்த் தெரிகிறதே
படரும் நினைவும் நெஞ்சினிலே
***பருகும் தேனாய் இனிக்கிறதே !

வருத்த மின்றி அலைந்ததுவும்
***வண்ணக் கனவு கண்டதுவும்
பருத்திக் காட்டில் புகைப்பிடிக்க
***பட்டுக் கன்னம் புடைத்ததுவும்
அரும்பு மீசை முளைத்தவுடன்
***அழகன் என்ற நினைப்புடனே
திருட்டுத் தனமாய்ப் பெண்டுகளைச்
***சீட்டி யடித்துச் சீண்டியதும்

பிளந்த வாயை மூடாமல்
***பின்னால்சென்று ரசித்ததுவும்
குளத்தங் கரையில் ஆடியதும்
***குதித்து நீச்சல் பழகியதும்
களத்து மேட்டில் நண்பனுடன்
***கதைத்துக் கூழை உண்டதுவும்
விளக்கின் ஒளியில் படித்ததுவும்
***வியந்து நினைக்க வைக்கிறதே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (23-Jun-16, 6:23 pm)
பார்வை : 77

மேலே