அழகாய் வாழ
தூக்கம் இமைகளில் படியும்வரை
படுக்கைக்கு செல்லாதீர்கள்,
தூக்கம் முடிந்ததும்
எழுந்து விடுங்கள்.
தூங்கும் நேரம் மட்டுமே
அமைதி, நிம்மதி, சந்தோசம்.
விழிகள் திறந்திருந்தால்
மனம் ஆசைப்படும்,
அலைபாயும், அலைக்கழிக்கும்..
அந்த அதிர்வுகளால்
உங்களை நீங்களே
வருத்திக்கொள்வீர்கள், இல்லை
வருத்தப்படுவீர்கள்.
இந்த வருத்தத்தை
அளவுடன் ஏற்றுக்கொண்டாலே
வாழ்க்கை அழகாய் விடும்..!