காதல் கொண்டதால்

என் தனிமை வாழ்வை நீக்க
உன் மீது காதல் கொண்டேன்
காதலால் வாழ்வில் புது சுகமும் தந்தாய்
நீ என்னோடு இருப்பாய் என்று
உன் நினைப்பை கற்பனையிலும் வளர்த்தேன்
அதுவும் இதயத்தில் புதைந்து புது உணர்வை விளைவித்தது

ராசி இல்லாத காதல் குழந்தையை
என்னால் பிரசவிக்க முடியமால் போனதால்
என் இதயமும் காயம் கொண்டு
ஆறுதலை தேடுகின்றது

எழுதியவர் : கலையடி அகிலன் (28-Jun-16, 5:32 am)
பார்வை : 105

மேலே