நான் விரும்பும் அழகிய தமிழ் மகள்

அடக்கமே அவள் பேசும் மொழி
அமைதியே அவளின் அணிகலன்

சிற்றுயிரும் சிதைவுறாதது அவளின் நடை
கருமேகமும் நாணும்அவளது கரிய கூந்தல்

பாலில் கூட பார்த்திராத அவளின் வெண்ணிற பற்கள்
பார்த்தவுடன் பழகும் அவளது யதார்த்த எளிய குணம்

சத்தமின்றி சிரிக்கும் அவளின் செந்நிற இதழ்கள்
சற்றும் சோர்வடையாத அவளது சூரிய விழிகள்

வம்புக்கும் வீண் வார்த்தைக்கும் பட்டென
திறவாத அவளின் பவள வாய்

ஏழைகளுக்கு இரங்கும் அவளின் எளிய பண்பு
எள்ளளவும் பதற்றமடையாத பக்குவ உள்ளம்

சினத்தால் சிவந்து புடைக்காத மெல்லிய மூக்கு
சிக்கனத்தை என்றும் சேமிப்பாக்கும் யுக்தி

தெளிந்த நீரோடைபோல் தெளிவாக சிந்தித்து
முடிவெடுக்கும் தேறிய பண்பு

மகளாய் பிறந்த மகத்துவத்தை மதிக்கும் மனம்
மருமகளாய் சென்று மகளாய் வாழும் வாழ்க்கை

கற்புக்கு அடையாளம் கண்ணகி மட்டும் தானா?
என்னைப் போல் கலைமகளும் தான் என்னும் கர்வம்

பெரியோரை பெருமையுடன் பேணும் பேருள்ளம்
கணவனின் மணிமுடியாய் கவினொடு இருத்தல்

அவளின் விலைக்கு,
விலைமதிப்புள்ள கோகினூர் வைரமும்
கூட தலை குனிந்து
வெட்கி நாணிடும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!

நான் விரும்பும் தமிழ் மகளின் அழகைக் கண்டு !!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (1-Jul-16, 8:03 pm)
பார்வை : 301

மேலே