தம்மாச்சி, தம்மாச்சி

தம்மாச்சி, தம்மாச்சி!
@@
யாரப் பாட்டி தம்மாச்சின்னு கூப்படறீங்க. காரைக்குடி ஆச்சி யாராவது வந்திருக்காங்களா?
@@@
அடி வெவரங்கெட்ட வேலாயி. எம் பேத்தி தம்மாச்சியைத் தாண்டி கூப்படறேன்.
@@@
பாட்டி நானும் 9 ஆம் வகுப்பு வரை படிச்சவதான். உங்க பேத்தி பேரு தாமசி-ன்னு உங்க மருமக ஒரு தடவ சொன்னாங்க. தாமசி-ன்னா இரவு -ன்னு அர்த்தமாம.
@@@
ஏண்டி வேலாயி பொட்டப் பிள்ளைக்கு பேயு பிசாசெல்லாம் சுத்தித் திரிய இரவு நேரத்தையா பேரா வைக்கணும்?

எம் மவனும் மருமகளும் ஏந்தான் இந்திப் பேரு வெறிபிடிச்சு அலையறாங்களோ. நம்ம தமிழ்ல் அழகான பேருங்க ஆயிரக்கணக்கில்

இருந்து என்ன பிரயோசனம். படிக்காதவங்களக் கெடுக்கறதே இந்த படிச்ச மனுசங்தாண்டி வேலாயி.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிறமொழிகளின் பெயர் அறிய,

எம் மொழி செம்மொழி
சீரிளமை குன்றாத
உலகின் முதன் மொழி!









The meaning of the name “Tamasi” is: “Night”. Categories: Hindu Names, Indian Names, Sanskrit Names. Used in: Hindi speaking countries. Gender: Girl Names. Origins: Sanskrit.तामसी

எழுதியவர் : மலர் (4-Jul-16, 10:40 am)
பார்வை : 107

மேலே