கடவுள் பெயர்

நான் வளர்க்கும்
இரு நாய்குட்டிகள் சேர்ந்து
எங்கிருந்தோ
ஒரு நாய்குட்டியை தூக்கிக் கொண்டுவந்து நின்றனர்.

அப்பா இத நாமளே
வளர்க்கலாம்பா
பாவம்பா
பேருகூட வச்சுட்டோம்பா
என்று அன்போடும்
மனித நேயத்தோடும்
இறைஞ்சி நின்றனர்
அவர்கள்
வைத்த பெயருக்காகவே
அதை வாழ்கைக்குள் சேர்த்துக்கொண்டோம்

என்ன பெயரென்று
கேட்காதீர்கள்.

ஏனென்றால்
அது
உங்களுடைய கடவுளுக்கு
நீங்கள் வைத்த
பெயராகவும் இருக்கலாம்.

- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (4-Jul-16, 4:47 pm)
Tanglish : kadavul peyar
பார்வை : 256

மேலே