நாமெழுதிய கவிதை

நாம் எழுதிய
காதல் கவிதையை
இந்த சாதி
எத்தனை ஏளனத்தோடு
வாசித்தது
எத்தனை முறை
உமிழ்ந்தது.
எத்தனை
துண்டுகளாகக்கிழித்தது.
என்பதை
தண்டவாளத்துக்கு
தப்பிய நம் தலைகள் அறியும்
இத்தனை
வருடங்கள் கடந்தும்
அந்த கவிதையை
மனைவியறிய
மையூத்தி நானெழுதிக்கொண்டிருக்கிறேன்.
எங்கோ
கணவன் அறியாமல்
கண்ணீர் விட்டு நீயெழுதிக்கொண்டிருப்பாய்.
நம்மை அறியாமலே
நமக்கிடையே
ஓடும்
ஓற்றையுணர்வு இரயிலில்
தினமும் அடிபட்டு
இனிதே
செத்துக்கொண்டிருக்கும் நம்சாதிகளிரண்டும்

நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (4-Jul-16, 4:39 pm)
பார்வை : 225

மேலே