நம்பிக்கை
சக மனிதன் மேல்
நம்பிக்கை இல்லாததால் தானே
தேவைப்பட்டது பூட்டு.!
அப்பூட்டு மேலேயும்
நம்பிக்கை குறையவே
தேவைப்பட்டது காமிரா..!
இனி சந்தேகத்தின்
எல்லை மீறுகையில்
எல்லோரின் தலையிலும்
ஏன் வைக்கக்கூடாது ஜி.பி.எஸ்.,
சேட்டிலைட் மூலமாவது கண்காணிக்க..?
அது சரி,
நம்பிக்கைக்கு பாத்திரமாகும்
பூட்டோ, கேமிராவோ
இங்கே சாட்சியாகுமா?
சந்ததி தேறுமா?
சங்கதி ஆகுமா?