அவளும் நானும்

என் வாழ்வின் தொங்கள் வரை
யார இல்லாமல் போனாலும்
அவள் வருவதாய் சொன்னாள்
என்னொரு கை கோர்த்த படியே..
அவளது விம்பம் இடையராது
கண்சிமிட்டும் பொழுதில் முன் வந்து போகிறது,

அவள் என் அழகி ஆனாலும்
அவள் ஒரு நாளும் அழகென்று சொன்னதே இல்லை,
என் ஆறாந் தரத்தில் முரண்பாடுகளோடு முட்டி மோதி
எனக்குள் முழுதாய் தொலைந்தவள்,

ஒரு காதலியாய் தோழியாய் சகோதரியாய் தாயாய்
இன்னும் சொல்லப் போனால்
என் உயிராகவும் அவள் என்னோடே கலந்திருக்கிறாள்...
என் ஏகாந்தம் அவளென்று கூட சொல்வேன்...

அவளுக்குரிய ஒரே ஒரு உயரிய சொத்தாக என்னை எண்ணும் அவள்
என் வாழ்வின் தனி இடத்தில்
என்றுமே உசந்து நிற்கிறாள்...

ஒரு நாள் குறும்புத்தனமாய் காலைத் தொடச் சொல்ல
யோசியாமல் தொட்டவள்
எந்தப் பயணத்திலும் என் கால்களை வாரிவிட மாட்டாள்...

அவளுக்கென்று நானும் எனக்கென்று அவளுமாய்
கடந்து வந்த பாதையில் பாதியில் வந்தவர்களே என் மீதி நண்பர்கள்..

அவளோடே அதிகமாய் சண்டையும் போட்டிருக்கிறேன்..
சேர்ந்து அழுதும் இருக்கிறேன்,
என் வீட்டு நிழல்
வகுப்பறை மேசைகள் எல்லாமே
இன்னமும் சொல்லும் அன்று அழுத கதையை ,

விளையாட்டாய் பர்தாவில் கட்டிய சொப்பினால்
பார்த்த அவள் முகத்தை
ஆறு பேரில் யாராலும் மறக்க முடியாது...

போஸ்டர் ஐடின்டிக்காய் அழைந்த நாட்களும்
நெசனல் ஐடின்டி பார்க்க தவித்திருந்த ஒன்னறை வருசமும் நினைக்கயில்
இன்று நகைப்பாச்சு.,

பைனல் எக்ஸாமில் பாதிப் பேப்பர் கிழித்து அவளும் நானும் மாறி மாறி அழுததையும்
ஆளுக்காள் சமாதானம் சொல்லி சிரித்ததையும் தான்
அந்த புளிமரம் மறக்குமா...?

என் அங்கங்கள் புல்லரிக்க
அவள் நடமாடுகிறாள் என் நரம்பெல்லாம்...

அவளை விட என்னைப் பற்றி அவளும்
என்னை விட அவளை பற்றி
நானும்
அதிகமாகவே பேசியிருப்போம்
கேட்டு கேட்டு சலித்தே போயிருக்கும் எங்கள் வீடுகளிலும்...

இந்த கல்லூரி வாழ்வின் முடிவோடு
செல்போன் அழைப்புக்கள் மட்டுமே எங்கள் செல்களை உயிர்ப்பிக்கிறது சில சமயம் டியூட்டரி சந்திப்புக்களும்,

சொன்னபடி ஒரே இலக்கில் தான் பயணிக்கிறோம்
பாதைகள் தான் வேறாகி
எங்கள் தொலைவை நீட்டப் போகிறது.

ஆனாலும் ஒரு நாள் சந்திக்கும் போது இருவரும் ஒருவராகவே இருப்போம்
இன்ஷா அல்லாஹ்.


My best Frd Rifka ku

எழுதியவர் : M.F.Askiya (5-Jul-16, 9:56 am)
Tanglish : avalum naanum
பார்வை : 776

மேலே