அழகிய தமிழ் மகள் -காதலியே
விழிகளில் விழுந்தேன்
எழுந்திட மறந்தேன் .
மடியினில் விழுந்தேன்
என் மனதினை தொலைத்தேன் .
மழலை போல் தவழ்ந்தேன்
அவள் முகம் காண தவித்தேன் .
என்னவளே ! இனியவளே !
என் எண்ணமெல்லாம் எங்கும்
நீயே ..!
பன்னிரு பவளச்செவ்வாய்
பாவை உன் இதழோ !
பார்வையாலே ..,
பட்டடினி போட்டாய் .
காதல் எனும் சிறையில்
அடைத்தாய் .
வான் மேகங்கள் ஒவொன்றும்
உன் கருவிழி கண்டு
கவி பாடும்.
தென்றல் காற்றும் ..,
தென்னை கீற்றும் ..,,
உன் கூந்தலாக மாறிட ஏங்கும்.
விண்ணில் தவழும்
விண்மீன்களும் நீ சூடிக்கொள்ள
தவம் கிடக்கும்.
புன்னகை பூவே ..!
உனை தீண்டிட தினம் ஏங்கும்
என் மனம் .