சொல்லடி என் தேவதையே
மெல்ல மெல்ல நகர்ந்து போகும் மேகம்
உன்னை பார்த்து தான்
தூவும் மழை...
சொல்ல சொல்ல கரைந்து போகும்
வார்த்தைக் கூட
உன்னை பார்த்து தான்
எழுதும் கவி ஆயிரம்....
காணாமல் போகும்
வானவில் கூட
நீட்டிக்கிறது இன்று
நீ வரும் வழியில்....
உன் விழி என்ன மாயம் செய்ததோ...
நிலவும் தன் ஒளி குன்றும்
தேவதை உன் அருகினில்....
மலரே தன் வாசம் தொலைத்து
உன் வாசம் கடன் கேட்குதடி....
இசைக்கருவிகள் தன் ஒசை மறந்து
உன் சிரிப்பின் ஒளி பிரதிபலிக்குதடி...
என் வீட்டின் முன்
உள்ள தெரு விளக்கும்
உனை பார்த்து கண் சிமிட்டுதடி....
தேவதையே உனை சேரும்
நாள் கேட்டு தொந்தரவு செய்கிறதடி
என் நாட்காட்டியும்......
சொல்லடி என் தேவதையே...