பாலைவனச் சோலை
விழிகள் பேசும் மொழிகள்...
என் விரதத்தில் எழுகின்ற கலைகள்...
இதயத்தில் இருக்கும் நிழல்கள்...
நீங்காத நினைவுச் சிலைகள்......
மறுத்தாலும் வெறுத்தாலும்
மறு ஜென்மம் தொடரும் உறவுகள்...
விளங்கிடுமோ?... இந்நேரமே யுகங்கள்...
கலைந்திடுமோ?... அந்த வான் மேகங்கள்...
காற்றினை கைது செய்யவா முடியும்...
கண்களால் பார்க்கத்தான் முடியுமா?......
விதிக் காட்டும் வழியில்
விளையாடும் பொம்மைகள்
விருப்பம் நிறைவேறக் கூடுமோ?...
வில்லாக வளைந்து
வீணை தான் இசை மீட்டுமோ?......
பந்தம் எனும் பாசக் கயிற்றில்
பிணைந்த மனங்கள்...
பருவம் எனும் கீற்றில்
பாய்ப் போட்டு
துருவம் எனும் இரு முனைகளாய்
பற்றற்று இங்கு இருக்குதே......
இறைவா நீ ஆணையிடு...
துன்பம் களைந்து
இன்பம் இருளில் ஒளியாக வேண்டும்
இதுவே என் முறையீடு...
எவர் கண் பட்டதோ?...
என் வாழ்க்கை
புயலில் சிக்கிய சிறு புல்லாக
நிலைத் தடுமாறுதே......
மலராய் நானும்
காம்பாய் நீயும்
ஒன்றாய் இருந்தோமே...
நீர் விலகும் தாமரையாய்
நீ விலகி செல்வது முறையா?...
மன்னவா...
என் மன்னவா......
மாலைச் சூட்டி
நீதான் எனை மணந்தாயே...
மறுபுறம்
ஏனோ?... இன்று துறந்தாயே...
வலியும் சுகமும்
பரிமார வார்த்தைகள் இழந்தேனே...
மண்ணுலகை
பிரியவே மனமும் கணிந்தேனே......
மணவாளந்தான் தூரம் என்றால்
மரணமும் தூரம் போனதே...
மல்லிகைப்பூ கொடியும்
தீண்டாதத் தீ சுவாலையில்
கருகாமல் கருகுதே......
கண் கொண்ட கணவன்
பக்கம் இருந்தும்...
பார்த்தப் பார்த்து வளர்த்தவர்கள்
கூட இருந்தும்...
பாலைவனச் சோலையாய்
பாவை நானும் ஆனனே......