ஊதி விட்டாள் சங்கு
#ஊதி_விட்டாள்_சங்கு
காதல் தீயை பற்றவைத்ததும் அவள்
காதல் வலையில் சிக்கவைத்ததும் அவள்
காதல் கடிதம் எழுதவைத்ததும் அவள்
காதல் கவிதை படைக்கவைத்ததும் அவள்
காதல் மழையில் நனையவைத்ததும் அவள்
காதல் நினைவில் அலையவைத்தும் அவள்
காதல் கனவைக் காணவைத்ததும் அவள்
காதல் உலகில் வாழவைத்ததும் அவள்
காதலை ஏனோ கசக்க வைத்தாள்
மோதல் பார்வையால் சிதைக்க வைத்தாள்
ஆசைக் காதல் அனாதை ஆனது
பூசை வாங்கிவாழ்வு பூகம்பம் ஆனது
காதலை வளர்த்தவள் பொசுக்கி விட்டாள்
வாழ்க்கையின் கணங்களை நசுக்கி விட்டாள்
எரியும் இதயத்திற்கு எண்ணெயாய் அவள்
புரிய வைத்தவளின்று அழுக வைத்தாள்
காதலின் பள்ளத்தாக்கில் தவிப்புடன் நான்
காதலின் சூறாவளியில் தூசியாய் நான்
காதலின் பெருந்தீயில் கருகியே நான்
காதலின் ஏமாற்றத்தில் கற்சிலையாய் நான்
போதி மரத்தடி புத்தனாய் நான்
பாதியும் அறிவில்லா சித்தனாய் நான்
ஆதி காலம்தொட்டு அறிவுடன் வாழ்ந்தவனுக்கு
ஊதிவிட்டாள் சங்கு என்னை காணவில்லை இங்கு.......