தினம் காதல் தாலாட்டு - தனிமை - 66 - 157

“ரோஜா மலரின் வாசல் நோக்கி
ராஜா பார்வை திரும்புது – அந்த
ரோஜா மலரின் பார்வையில் மயங்கி
ராஜா பார்வை கிரங்குது..!”

சிகப்பு ரோஜா தலையில் இருப்பது
வெள்ளை ரோஜாவின் பூங்கொத்து
ரோஜா மலரே - ரோஜாவை சுமப்பது
காண்பது அதிசயப் பூங்கீத்து

விழியின் ஓரம் வசந்தம் வீசும்
நேரம் சுப நேரம்
இதழின் ஓரம் அமிர்தம் ஊறும்
பருகிட சுகமாகும்

நடக்கும்போது நாட்டிய நடையில்
நடந்துப் போகிறாள் – அவள்
நலுங்கி குளுங்கி நடப்பதாலே
இடை சாரீரம் மீட்கிறதே…!

எல்லாம் மாயை - அவளோ ராதை
பிரம்மன் எப்படி படைத்தானோ – அவள்
எனக்கு கிடைப்பாளோ…!

கார் கூந்தலில் பூந்தென்றல் மோத
காரிகைக்கு காதோரம் வருடல்தானோ
காத்திருக்கும் கண்களில் காமன் புகுந்தால்
கண்மணி அவளுக்கு காதல் மலராதோ..

அழகில் ராணி – அன்பில் வாணி
அவளை அடைபவன் பாக்கியசாலி
அந்த பாக்கியசாலியாய் நானிருக்க
பாக்கிய லட்சுமியே அருள்பாவி..!

எழுதியவர் : சாய்மாறன் (7-Jul-16, 6:20 pm)
பார்வை : 88

மேலே