அவளும் நிர்வாணமாய்

சில் என்று
காத்து
ஜன்னல்
அங்கும் இங்கும்
அசைய
ஒரு மெல்லிய மனம்.....

அவள் கொலுசு
ஓசை ..
வருகையை சொல்லி
தன் இருப்பை காட்டியது ...

மின் இணைப்பில்
மிளிரும் விளக்கு
போல
என் விழிகள்;;;

ஆவலுடன்
அவள் வருகை
தேடி
பட்டாம் பூச்சிகள்
மனசில் ....

அவள் தேவதை
தேன்
குழைத்த
நிலவு போல ....

மாதுளம் இதழில்
மயக்கும் மொழியோடு
என்னை அவள்
தழுவிய போது
சுகம் ...

மாலை சூரியன்
கடலை
தழுவி சுகம்
காண்பது போல

அவள் வெட்பம்
சுட்டெரிக்க
என் பெரு மூச்சு
சுவாசம் கிடைத்து
உயிர் பெற்றது ...

துப்பட்டாவின்
துடிப்புக்கள்
நெஞ்சில்
முத்தமிட முத்தமிட
நான் கவிதையானேன்
அவள்
கவிஞன் ஆனாள்.....

சீட்டு குருவி போல
களவியல் பாடம்
காதலில் ...

சின்ன மௌனம்
செல்லமாய் சிரிப்பு
இடுப்பில் கிள்ளல்
இனிதாய் கடி

கொஞ்ச நேரம் தான்
மனம்
மறு படியும்
கேட்டுக்கும் ..

இப்போது
என் அறை
கோவில் ..
தெய்வமாய்
அவள் ....
ஆம்
அவளும் நிர்வாணமாய் ....

மடி மீது
தலை சாய்த்து
அவள் வருடிய போது
இந்நிலையில்
இறப்பு வாராதோ
என ஏங்கினேன் ...
காதல் சுகம்
சுகமே

மு.ஞா .செ.இன்பா

எழுதியவர் : மு.ஞா .செ.இன்பா (8-Jul-16, 12:32 pm)
பார்வை : 151

மேலே