நடுவீதியில்
அன்பினை தொலைத்து விட்டு
-------ஆலயம் தொழுவ தென்பது
கண்ணைவிற்று சித்திரம் வாங்கி
---------காட்சியை காண்ப தாகும்!
புன்னகையை மறந்து தானே
---------பொருளீட்டீ சேமித்து வைத்து
உன்னத வாழ்வே என்று
--------உரைத்தல் தகுமோ சொல்லு!
எங்கும் எதிலும் கலப்படமாய்
--------இருப்பதை எண்ணி பாராமல்
வாங்கித் தானே குவிக்கின்றோம்
-----விழிப்புணர்வை தாம் மறந்தோம்
கங்குல்-பற்றும் சேதிகள் கேட்டும்
---------காணொளி தானே ரசிக்கின்றோம்
அங்கும் இங்கும் கதைபேசி
----------ஆலாய் தானே பறக்கின்றோம்
கற்றகல்வி பயன்கள் எல்லாம்
--------கடல்கடந்தே விற்கின் றோம்
முற்றிவிளையும் பூமியெல் லாம்
--------மனையென்றே பிரித்து விட்டோம்
சொற்போர் நடத்தி பிழைப்போரே
---------சாமரம் வீசியே வாழுகின்றார்
நற்பெயர் பெற்ற நல்லோர்கள்
---------நடுவீதியில் இருப்பது நலமோ?