நிலவே மலரே

இறைவா நீ அறிவாய்...
இந்த பேதை அறிவாளோ?...
இரு மலர்கள் உதிர்ந்தது
இவள் கருவில் தானே
இனியும் எவர் அறிவாரோ?......
நீரிலே பூத்தப் பூக்கள்
நீரோடையில் தவழ்ந்து
தாய்க்கே தெரியாமல்
தனியே மிதந்து சென்றதோ?...
விதி தான் விலக்கி வைத்ததோ?......
இறைவா நீ அறிவாய்
இந்த பேதை அறிவாளோ?......
மடியில் பூத்த மலரோடு
மாணிக்க வீணை
தொட்டில் கட்டி இசை மீட்டுதே......
வானில் பூத்த நிலவோடு
மரகத வீணை
வீட்டில் மெட்டு கட்டிப் பாடுதே......
இளவம் பஞ்சு மெத்தையில்
மான் ஒன்று தூங்குதே...
மயில் பீழி மஞ்சத்தில்
வான் தூரல் போடுதே......
பாலூட்டும் மங்கை ஈன்ற சொந்தத்தில் வாழுதே...
பாசமூட்டும் நங்கை வந்த சொந்தத்தாலே வாழுதே...
இணைந்திடுமோ?... இரு துருவங்கள்......
இறைவா நீ அறிவாய்
இந்த பேதை அறிவாளோ?......
வாய் விட்டு சிரிக்கும்
வதனம் கண்டு தாய்
ஜென்மம் கடந்துப் போகிறாளே......
உலகம் உறங்கும் இரவுகளில்
உறங்கும் அழகை அவள் பார்ப்பாளே......
இமை மூடும் இரவில்
கண்ணுக்குள் வைத்தே இவள் காப்பாளே......
உண்மை ஒளிரும் நேரத்திலே
தேவகி மனந்தான் நிதம் ஏங்குமோ?...
யசோதை நெஞ்சந்தான் வலி தாங்குமோ?......
இறைவா நீ அறிவாய்
இந்த பேதை அறிவவாளோ?......