என்றும் என் அம்மா நீ தானே மா

செல் அம்மா
நீ தான் எந்தன்
செல்லம் அம்மா

சொல் அம்மா
உன் கொஞ்சும் மொழியை
கொஞ்சம் சொல்லம்மா

நில் அம்மா
வந்து என் பக்கம்
கொஞ்சம் நில்லம்மா

கள் அம்மா
நீ அருந்திய நீரின் மீதம்
என்றும் கள்ளம்மா

என் தாயம்மா
நீ என்றும்
என் மகளல்ல
என்றும்
என் தாயம்மா

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (9-Jul-16, 10:35 pm)
பார்வை : 1532

மேலே