மனித சங்கிலி
மண் புழுவும்
நீர்ப் பறவையும்
நாயும் நரியும்
பூனையும் எலியும்
கிளியும் குருவியும்
புலியும் சிங்கமும்
எறும்பும் யானையும்
கழுதையும் குதிரையும்
உணவு சங்கிலியை
உடைக்காமலிருக்க
தான் வயிற்று பசிக்கு
புசிப்பதற்காக
ஒன்றையொன்று கொல்லுதே
தவிர
வேறொன்றும் இல்லை
ஆனால் பாவம் செய்த
இந்த மனித இனம்
மட்டும் தன்னை அழித்து
உலகையும் அழிக்கிறது