அடி பொக்கிஷமே,,,ஆதலால் நீ கொஞ்சம் பொறு ம்ம்

அடி பொக்கிஷமே,,,ஆதலால் நீ கொஞ்சம் பொறு ம்ம்
===================================================

எனக்குத் தெரியும்
பழகிய என் முத்த வாசத்தில்
உனக்கு உயிர்ப்பு இல்லைதான்
அதே பாசமுத்தம் தான்
சமாளிக்கிறாய்
எனக்குத் தெரியும்
வாக்குறுதி அளிக்கிறேன்
உன் உடம்பு சரியில்லாத போது
உன்வாய் துருநாற்றம் அடிக்கலாம்
அப்போதும்
உனக்கு முத்தம் பதிகிறேன்
உன் அருவருப்புகளை
தாண்டிதான்
என் முத்தங்களும்
என் காதலும் உன்னிடம்
நீண்டுக்கொண்டிருக்கும் ம்ம்
நீ அடித்துத் துரத்திய
என் நினைவு கண்கள்
நீ மாறிய வீட்டின் சாவி இடுக்கு வழியாக
உன்னை ஒளிந்து பார்க்கின்றன
எனக்குத் தெரியும்
உன் கண்கள்
என்னைக் காண மறுக்கின்றன
நிறுத்தாமல்
உரையாடிக் கொண்டிருப்பேன்
எனக்குத் தெரியும்
இப்போதெல்லாம் அதில் உனக்கு
நாட்டம் இல்லை என்று
அவைகள் உனக்கு
சலிப்பூட்டுகின்றன என்று
நான் உனக்கு போரடிக்கலையா
என்று கேட்கும்போதெல்லாம்
எனக்குத் தெரியும்
என்னை உன்னால் சகித்துக்கொள்ள
முடியவில்லை என்று
ஏசிக்காற்றின் குளிர்ப்பரவும்
தேநீரோடு
உன்னை வாசித்துக் கொண்டிருக்கிறேன்
எனக்குத் தெரியும்
உன்னைத் தொடர்வதாய்
கோபப்படுவாய் என்று
நேரடியாக என்னிடம் எதையும்
சொல்வதாய் இல்லை
யார்க்கூடவாச்சும் கடலை போடு
கவிதை எழுது என்று
சொல்லும்போது
எனக்குத் தெரியும்
நான் உன்னைவிட்டு
சென்றிட வேண்டும் என்று
அடி பொக்கிஷமே
நீ சலிக்க சலிக்க இப்படியே
தொட்டும் முட்டாமல் தொடர்கிறேன்
ஆதலால் நீ கொஞ்சம் பொறு ம்ம்
சிலகாலம் போனால்
உனக்கு எல்லாமே சலிக்கலாம்
யாருடைய நிராகரிப்போ
நான் கண்டு ரசித்த
உன் விழிகளின் உயிரொளிப் பிடுங்கலாம்
அப்போது உனக்கொரு
தனியறை மீண்டும் அவசியப் படலாம்
அதில்தான் முதல் முதலில்
நீ என்னோடு இணைந்திருந்தாய்
மீண்டும் என் நினைவுகளை
நீ அசைப்போடலாம்
அதனால்தான்
உன் வீட்டு சாவி இடுக்கு வழியே
நீ அழும் முன்னே
உன்னை சுமந்துகொள்ள
என் நினைவுகண்கள்
பார்த்துக்கொண்டிருக்கின்றன
நடமாடும்
உன் பம்பரகண்களுக்கு
என் நினைவுகள் சாட்டையாகலாம்
உனக்குள் இருக்கும்
பதினான்கு வயது சிறுமி
மறுபடி பிரசவிக்கலாம்
நீ என்னை அப்போது தேடலாம்
மீண்டும் என் வார்த்தைகள்
உன் குரல் நடுங்கவைக்கலாம்
எனக்குள் உனக்குள்
என்றோ காதலாகித் தொடங்கி
இன்று சலிப்பாகிவிட்டவை
மீண்டும் காதலெனக் கொள்ள கெஞ்சலாம்
உன் உயிர்த்துளி நிலம்பட
பொறுக்காதவனின்
உன்னருகே உன்னைக் கண்டு நிற்கும்
நினைவுகள்
கரங்களாலும் மார்பினோடும்
அன்றும் உன்னை
அணைக்கக் காத்திருக்கலாம்
அடி பொக்கிஷமே
நீ சலிக்க சலிக்க இப்படியே
தொட்டும் முட்டாமல் தொடர்கிறேன்
ஆதலால் நீ கொஞ்சம் பொறு ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (10-Jul-16, 2:14 am)
Tanglish : yenakkuth theriyum
பார்வை : 151

மேலே