காதலியின் ஆசை

என்னை நேசிக்கும் காதலன் வேண்டாம், என்னை மட்டுமே நேசிக்கும் காதலன் வேண்டும்!!

இதழ் முத்தம் தந்து தன் ஆசையை காட்டும் காதலன் வேண்டாம்,நெற்றி முத்தம் கொடுத்து தன் பாசத்தைக் காட்டும் காதலன் வேண்டும்!!

என் கண்ணீரைத் துடைக்கும் காதலன் வேண்டாம், என் கண்ணில் நீர் வராமல் பார்த்துக் கொள்ளும் காதலன் வேண்டும்!!

பட்டு மஞ்சத்தில் என்னை உறங்க வைக்கும் காதலன் வேண்டாம்,தன் நெஞ்சத்தையே மஞ்சமாய் விரித்து அதில் உறங்க வைக்கும் காதலன் வேண்டும்!!

தன் உயர் உள்ளவரை என்னை காக்கும் காதலன் வேண்டாம்,தன் உயிர் பிரியும் போது என்னையும் தன்னுடன் அழைத்துச் செல்லும் காதலன் வேண்டும்!!
என் உயிர் காதலனே நீ இல்லாத வாழ்வு எனக்கெதற்கு???

எழுதியவர் : ஜாஸ் (10-Jul-16, 1:19 am)
Tanglish : kaathaliyin aasai
பார்வை : 456

மேலே