கைநாட்டில் சுயம்வரம்

கைநாட்டிட்டே வாழுவோம்
கை நாட்டில் கொடி நாட்டுவோம் !

சுயம்வரத்தில் :
மன்னன் : நான் கைநாட்டரசன் நீவீர் ?

மற்றொரு மன்னன் : நான் பொய் நாட்டரசன் . இதோ மாலையுடன் வருகிறாளே
காரிகை இவளும் கைநாட்டு இளவரசிதான் . ஆனால் கைக்காரி சாதுரியக்காரி .
சாகசக் காரி .மைவிழிக்காரி உமக்குத்தான் பொருத்தம் . காலம் தாழ்த்தாமல்
விரைந்து உங்கள் ஸ்டேட்டஸை அறிவித்துவிடுங்கள் கைநாட்டு மன்னா !

மன்னன் எழுந்தான் கட்டை விரலை இடதுகைப் பெரு விரலை உயர்த்தி நின்றான் .
வேறு யாருக்கோ மாலையிடச் சென்ற கைநாட்டரசி ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள்.
விரைந்து வந்து தனக்கு உரிய வரனுக்கு மகிழ்ச்சியுடன் மாலையிட்டாள்.
மற்ற மன்னர்கள் இவனுக்கா மாலை என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர் .
அவர்களுக்குத் தெரியுமா கை ரகசியம்
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-16, 10:55 am)
பார்வை : 117

மேலே