எது பாவம்

விலைமகள் என்றாலும்

விருப்பமில்லை என்றால்

விரல் பட்டாலும் அது பாவம்


மங்கை ஒருத்திக்கு

மனமில்லை என்ற பின்பு

இச்சைக்கு இணங்கிவிடு -- என்று

இரக்கமற்று கணவன் சொன்னால்

அது பாவம்


ஏழ்மை பெண்ணினத்தை

வலிமை கொண்டு

வளைத்து இணங்க வைத்தால்

அது பாவம்


மாற்றான் மனைவிதனை

மனதால் நினைத்தாலும்

அது பாவம்


இளங் கன்னியரை

ஏமாற்றி இணங்க வைத்தால்

அது பாவம்

இணங்க மறுத்தவளை

எட்டி அறைந்தாலே

பாவமோ பாவம் எனில்

வெட்டி சாய்த்தால்

மகா பாவம் என்று

மானுடம் அறியாதோ !

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (10-Jul-16, 9:56 pm)
Tanglish : ethu paavam
பார்வை : 105

மேலே