அழகிய கிராமத்தின் அவலம்

நாற்பது வீடு
நாலு கரை பிரிவு
நாலு கரைக்கும்
நாலு சாமி

பட்டங்கள் படிச்சாலும்
பங்காளிகள விட முடியல
தப்பே செஞ்சிருந்தாலும்
தன்னோட பங்காளி

எங்கிருந்து வந்ததிந்த
எழவெடுத்த பிரிவு?
எழுதப்படிக்க தெரிஞ்சபின்னும்
எதற்கிந்த மூடத்தனம்?

அஞ்சறிவு ஜல்லிக்கட்ட
அறவே நிறுத்திப்புட்டோம்
ஆரறிவு மல்லுக்கட்ட
அன்பால நிறுத்த முடியல...

அறிவால வளரும் உலகத்தில்
அற்ப விஷயங்களுக்காய்
அடித்துக் கொள்கிறோம்
அண்ணனும் தம்பியும்

இனத்துக்குள்ளே வேண்டாம்
இனியும் இந்த இழிசெயல்
கரை உடைத்தெறிந்து
கரம் சேர்ப்போம் நம் ஊரைக்காக்க

இந்த தலைமுறைக்கு
இது தலைகுனிவு
இனிவரும் தலைமுறைக்கோ
இது அவமானம்

எழுதியவர் : பொய்கை கணேஷ் (12-Jul-16, 2:51 pm)
பார்வை : 106

மேலே