காதல் கொலை

காம பசிக்கு;
காதல் எனும் பெயர்சூட்டி !
தெரு நாயாய் சுத்துற;
தேக சுகம் தேடியே !

கள்ளங்கபடம் இல்லாதவளை ;
கண்ஜாடை காட்டியே ;
காலமெல்லாம் - கூட வருவேன்னு ;
கவிதை மழையில் நனைக்கிற !

பட்டு மேனி அவளையும் ;
தொட்டு தொட்டு பேசியே !
பாலுணர்வை தூண்டியே - காம
பசியையும் தீர்க்கற !

பாழாய் போன பெண்ணும் இப்போ ,
பரிதவித்து நிக்கறா !
பார்க்காதவன் போல நீயோ ;
பல்லிளித்து அலையற !

காத்துக் கிடந்த காதல் கூட -
கல்லறையில் உறங்குது !
கவலையின்றி இருக்கும் காதல் -
கொலையிலதான் முடியுது !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (12-Jul-16, 5:12 pm)
Tanglish : kaadhal kolai
பார்வை : 227

மேலே