இசையானேன்

வழக்கமான கொஞ்சம்
வழக்கத்துக்கு மீறிய மிச்சம்
முடித்து விடத்தான் திட்டம்
துலங்கிய காலையில்
நகரும் வேளையில்
இப்படி நான்
இசையிலா கட்டுண்டு
கரைய வேண்டும். ...
எல்லாம் மறந்து
மகிழ்ந்து சுகித்து
சுகப்பட்டால்
அந்த
மிச்சமும் கொஞ்சமும் ?
இசையாகி
போகட்டும்
என்னோடு. ..

எழுதியவர் : அகராதி (13-Jul-16, 9:32 pm)
பார்வை : 92

மேலே