அன்பே வா

பொன்னால் மணியால்

வைர வைடூரியங்களால்

நீ உன்னை வித விதமாய்

அலங்கரித்துக் கொண்டாலும்

என் அன்பே உன்னை

என்னிடம் எப்போதும் ஈர்ப்பது

உந்தன் காந்த கருவிழிகளும்

அவைப் பேசும் கற்பனைக்கெட்டா

அற்புத நடன மொழிகளும் மற்றும்

உன் மனதில் சிறை வைக்கும்

உந்தன்' மல்லி மலர்ந்ததோ' என்னும்

பூமண சிரிப்பும் தான் ஆருயிரே .

ஸ்ரீதனமாய் பொன் வேண்டேன்

பொருள் வேண்டேன் -உந்தன்

உதடுகள் ஏந்தி தரும் நளின

புன்னகை ஒன்றே போதும் என்பேன்

இதுதான் நான், என் மனம்

உன்னை சரணடைய காத்திருக்கிறேன்

அன்பே வா ! அன்பே வா!

எந்தன் அன்பே வா!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Jul-16, 3:12 pm)
Tanglish : annpae vaa
பார்வை : 284

மேலே