டேக் கேர் எனும் துன்பம்

டேக் கேர் எனும் துன்பம்
-----------------------------------------------
நீ உதிர்த்துப் போன Take care...
சில நாட்களுக்கு
பின் போகச் சொல்கிறது என்னை

உன் பெருவிரல் தொட்டுதிரும்
தகவலுக்கு காத்திருந்த எனது நொடிகள்
மூன்று புள்ளிகள் வைத்து
அப்போது போல இப்போதும்
தவமிருக்கிறது

நீ அனுப்பிய "ஹ ஹ ஹ.." விற்கு
ஆகாச வாய் திறந்த என் ஸ்மைலிகள்
சிறு கோட்டால் உதடமைத்துள்ளது

உன் மெளனக் குறியீடுகளில் ஒன்றை
தவறிய அழைப்பாகவாது கொடு

முன்பைப் போல உன் குரல்த் தகவலால்
நான் திரும்பக் கிடைக்குமாறு செய்

விரலசைவு பதில்களால்
என் வீணாகும் பொழுதினை
எப்பவும் போல் இல்லாமல்
கொஞ்சமாவது சேகரி

"இனி இப்படி பண்ணா
கொன்ன்ன்னுருவேன்...."
என வரும் உன் தகவலுக்கு
"ம்" என தலையாட்டும்
பொம்மையோடிருக்கிறேன்....

மெனக்கிடும் வாய்ப்புகளுக்குநினைவின் மரம்
எப்போதும் அவிழ்க்கிறது ஏதோ ஒன்றை

சிலவற்றை நான்
பூக்களாகக் கோர்த்திருக்கிறேன்
உன் சிறு வாய்ப்புகள் அவிழுமென...

- முருகன்.சுந்தரபாண்டியன்

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (14-Jul-16, 3:35 pm)
பார்வை : 93

மேலே