அழகு என்பது
மணம் தரும் இளம் மலரை சுவாசிக்கும் நீ
குணம் மிக்க இந்த இளைஞனை
நேசிக்க மறுக்கிறாயே!
ஏன் இந்த முரண்பாடு?
உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் வடிக்கும் நீ
வாடியிருக்கும் இளம் செடிக்கு
தண்ணீர் ஊற்ற ஏன் மறுக்கிறாய்?
வாழ்வில் நற்குணம் கொண்ட
இதயத்தைத் தேடி உறவு கொண்டாடு
மாறாய்...
முக அழகைக் கண்டு
மயங்கி நீ ஓடாதே!
வீணாய் வீழ்ந்து விடாதே!
ஏனெனில்...
அழகு என்பது தேகத்தில் இல்லை!
அகத்தில் இருக்க வேண்டும்.