நான் வேண்டுவன
நான் வேண்டுவன
***********************
எதிர்ப்பும் இல்லாமல் மறுப்பும்
இல்லாமல் வாழ்வின் வழி
பயணம் வேண்டும்..
வெற்றிட மனதில் அனைத்தையும்
வியப்போடு எதிர்கொள்ளும்
சிறுகுழந்தையாய் குதூகலிக்க
வேண்டும்... ஒத்த நிகழ்வுகள் என்று
எதுவும் இல்லை கடந்தைவைகளை
இருப்பவைகளோடு
ஒப்பிடுதல்
அறிவிலித்தனம்
என்று நான்
தெளிவுற வேண்டும்...!