ஆராதனை

உன்னை நீயே ஆராதிக்கும்போது பல கோடி
விண்மீன்கள் அட்சதை தூவி வாழ்த்த கண்டேன்.
உன்னையே உன் கையில் பிம்பமாய் கொடுத்த
அந்த பிரமனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே
உயிர் துறக்க கண்டேன்.
உலகிலேயே அழகானது எது என்றால் பெற்றவள்
ஒவ்வொருவருக்கும் மட்டும் தெரியும் அது
தன் குழந்தை என்று
யார் கூறியது குயில் ஓசை தான் இனியது என்று
மழலையின் ம்ம்..... இங்...... ரீங்காரத்திற்கு உருகாத
உயிர் உண்டோ இம்மண்ணில்