ஆசான்
அன்னை மடியில்
துள்ளி விளையாண்டு
அடுத்த இடம் தேடி போனோம்
அதுதான் பாட சாலை
தாயின் மரு பிறப்பாக
இருந்தாலும் இருக்கும்
என்ற சந்தேககம் தான்
எப்போதும் எனக்கு
தயை நேசிக்க கற்றுதந்தாள்
பெற்றெடுக்காத அன்னை
ஆசிரியர் தினத்தன்று
சேராத வாழ்த்து கடிதம்
கச்சிதமாக பொருந்தியது
அன்னையர் தினத்திள்
அவள் காட்டிய அன்பில்
தானோ என்னவோ
அவள் கற்பித்ததை
இன்றும் மறக்கவில்லை
பிரம்மன் வரம் கொடுத்தாள்
மீண்டும் மாணவனாக வேண்டும்
அதே அசிரியர்க்கு
பாண்டிய ராஜ்