அரசியல் வாதி >

முழு மனதின்றியே
தேர்தலில்
முத்திரைகள் குத்தி
நாம் முட்டாளாகி விட்டோம்.
அதனால் தான்
முகவரி இல்லாதவர்களும்
முக்கியஸ்தர்கள்
ஆகிவிடுகிறார்கள் .
தேர்தல்
வாக்களித்தீர்களே
என்ன செய்தீர்கள்?
கேட்கத்தான்
செய்தோம்.
நாங்கள் எங்கே
வாக்களித்தோம்
நீங்கள் தானே
வாக்களித்தீர்கள்
என்கின்றாரே.!!
பொருளாதாரத்தை
முன்னேற்றுங்கள்
என்று சொன்னால்
கொண்டுவா
அந்த தாரத்தை
பார்த்துவிட்டு
முயற்சி செய்கின்றேன்
என்கின்றாரே.
இவர்கள் கையில்
தானே நம்
நாடு இருக்கிறது.
இந்த குடி ஆட்சி
என்னமாய் நம்மை
குழப்புகிறது.
குடிமக்கள்
ஆள வேண்டுமா ?
அல்லது
குடி
மக்களை ஆள
வேண்டுமா ?
ஆட்சியாளர்களுக்கு
புரியவில்லை!
அதனால் தான்
இரண்டுமே ஆட்சி
செய்யட்டும்
குடியா முழுகிவிடும் ?
விட்டுவிட்டார்கள்
புத்திசாலிகள்.