போட்டி நிறைந்த உலகில்

போட்டி நிறைந்த உலகிலே
போராளியாய் தினம் போராடுகையில்...
தொலை நோக்கு சிந்தனையை
தொலைத்து விடலாகுமோ?

ஏன் மாற்றம்?
இந்த மாற்றம்தான் வளர்ச்சி எனினும்
அதில் ஏமாற்றம் வந்தால்
வளர்ச்சி வழுக்கும்
ஏமாற்றம் அடைந்த மனம் வலிக்கும்!

ஓ-தலைவா!
ஒன்றை சொல்தல் பெரிதா?
அதை செய்தல் பெரிதா?

ஆடொன்றை மேய்க்க
ஆள் நூறு தேவையெனில்....
இம்மாற்றம் ஏமாற்றம்தானே!

வாழ்நாளெல்லாம் நல்லவனாய்
இருக்கத்தான் ஆசை
சூழ்நிலை அதை அனுமதிப்பதில்லை
இருப்பினும் நல்லவர்களாய்
பலர் நடிக்கிறார்கள் எந்நாளும்...

திரைக்குப் பின்னால் இருந்து
என்னதான் இயக்கினாலும்
இயக்கனருக்கு கிடைக்காத புகழ
நடிகருக்குத்தானே பெருமை!

கல்வி என்பது வியபாரமாய் ஆனதால்
பொது நலனை எதிர்பார்ப்பது தவறுதானே!
அதில் ஆங்கில மொழி மட்டும் அறிவாகுமோ?
ஆங்கிலம் பேசுபவன் எல்லாம் அறிவாளியோ?

இவ்வுலகில் குறைந்து கொண்டேயிருக்கும்
கூட்டுக் குடும்பங்களுக்கு இடையில்
நாளுக்கு நாள் ஆலமரமாய்....
விரிந்து கொண்டே இருக்கு சுயநலம்தான்!

எனினும் பின்னுக்கு செல்லாமல்
நீளம் தாண்டுதலில்
முன்னுக்கு செல்ல முடியாது!

தடை கற்களைத் தாண்டாமல்
வெற்றியை தொட இயலாது!

ஒருவனது வெற்றியை
அவ்வளவு எளிதாய் எடை போடாதே!
உன் திறமை எப்பொழுதும் சந்தேகிக்காதே!

மாறாய் திரும்பிப்பார்
நீ கடந்து வந்த வழியில்
எவ்வளவு மேடு பள்ளம் இருந்தது என்பது புரியும்!

ஓ- மனிதா !
நீ எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும்
ஒரு போதும் மறந்து விடாதே!
நீ கடந்து வந்த பாதையை
தமிழ்தாய் மொழியை...!

எழுதியவர் : கிச்சாபாரதி (16-Jul-16, 11:16 pm)
பார்வை : 1448

மேலே