அழியாத நினைவுகள்

கல்யாணம் ஆனாலும்
காதல் விடுகிறதா?

கடந்த
நாட்களை
எண்ணிக்கிடக்கிறேன்...

மறைக்கத்தான்
முடிவதேயில்லை..

காதலித்தவளே
மனைவியானதும்
காதலை மறந்து விட்டாளே.!

காதலை நினைவு கூர்ந்தாலோ
கடுப்படிக்கிறாள்,

ஆறிப்போன காப்பி
யாருக்குத்தான் பிடிக்கும்?
என்றே அலுத்துக்கொள்கிறாள்...

ஆனால் என்னால்
அப்படியெல்லாம்
மறந்து இருந்து விட முடியாது.

தாஜ்மகாலை நினைவு
கூறுபவர்கள்
காதலை மட்டுமே எப்படி
அடையாளமிடுகிறார்கள்?

எனவே தான்
பிடித்த
நினைவுகளை
அசைபோடுகிறேன்....

செரிக்கத்தான்
விடுவதேயில்லை......!

எழுதியவர் : செல்வமணி (17-Jul-16, 12:55 am)
Tanglish : aliyatha ninaivukal
பார்வை : 153

மேலே