தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் -52 = 167

“பூஞ்சோலை பொன்மாலை
பாடுது பாமாலை..
இந்த அம்மானை தரிசிக்க
ஏங்குது என் மனவோலை..!”

“மடலெழுது மரிக்கொழுந்தே
மலரள்ளி நான் வாரேன்
மணம்பேச நீயிங்கு
படியிறங்கி வாயேன் !”

காதல் சுதந்திரம் காண்போம்
இருவரும் இன்ப உலகிலே !


அழகிய விழிகளில்
அபிநயம் பிடித்து
அறுபது கலைகளும்
ஒருங்கே நடத்தும்
நீ ஒரு தேவதையோ ?
மின்னும் தாரகையோ ?
என்னில் நீ கலந்தால்
இன்பம் எதுவரையோ..?

கோடை மழையில் நனைந்த படியே
இருவரும் இன்பம் காண்போம் வா..!

இந்திரன் ஓதிய மந்திரத்தில்
தங்கத்தாமரை ஆனாயோ ?
சந்திரன் வரைந்த ஓவியத்தின்
கலைக்கோயில் நீதானோ ?
தொண்டை சிறுத்தவளே..!
காதலை உரைப்பவளே..!
உன்னைவிட பேரின்பம்
வேறேதும் கிடையாதே !

கோடை மழையில் நனைந்த படியே
இருவரும் இன்பம் காண்போம் வா..!

எழுதியவர் : சாய்மாறன் (19-Jul-16, 9:37 pm)
பார்வை : 62

மேலே