கலங்கம் செய்யும் காளையிவர்

துணைக்காய் தேடி அலையும்
தெருவோர நாய்களைப் போல்
சுகம் தேடியே அலையும்
ஜென்மம் இவர்!!

மணிக்கணக்காய் காத்து நின்று
மனதால் கற்பழித்து
காதல் எனும் புனிதத்துக்கு
கலங்கம் செய்யும் காளையிவர்!!

பேச்சினிலே உத்தமராய்
பார்வையிலே பணிவானவராய்
ஏமாறும் பேதையரை
ஏய்த்துவிடும் பாவி இவர்!!

தெருவினிலே முகாமமைத்து
தெம்மாங்கு பாட்டிசைத்து
வழி போவார் குமரிகளை
வம்பிழுக்கும் வம்பரிவர்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (20-Jul-16, 9:21 pm)
பார்வை : 79

மேலே