ஆண் மகன்

வினா:-1

என்ன விலை கொடுத்து வாங்கினாய்
இந்த ஆண் மகனை?
வரதட்சணை சந்தையில்...

விடை :-1

விலைமகளைத் தேடும்
ஆண் மகன் இல்லை -இவன்!

என்னை மட்டுமே விரும்பிய
என்னுயிர் காதல் கணவன்தான்
என்னவன் !

வினா:-2

அவ்வளவு தகுதியுடையவனா?

விடை :- 2

ஆம்! காதல் என்றால் சும்மாவா?
சமத்துவத்தின் ஆரம்ப விதையல்லவா!
ஆதலால்தானே சுயநலம் மிக்கவர்கள்
அதனை அழிக்க முயற்சிக்கிறார்கள்...

பொது நலம் கொண்ட ஆலமரத்தை
அவ்வளவு எளிதாய் சாய்திட முடியுமா என்ன?

வேலை வெட்டி இல்லாதவனுக்கு
ஆண்மையை இழந்த ஆண் மகனுக்கு
50 பவுன் 100 பவுன் பொன்னும் கொடுத்து
எழில் பெண்ணையும் கொடுக்கும்
முட்டாள் பெற்றோர் இல்லை என் பெற்றோர்...
ஆதலால், உண்மைக் காதலை ஏற்றுக் கொண்டார்...
இருவீட்டாரும்...நினைத்த வாழ்வு வாழ்கிறோம்!

ஒரு ஆணுக்கு விலைமகள் ஆகாத பெண்ணாய் நானும்...
ஒரு பெண்ணுக்கு விலைக்கு போகாத ஆணாய் அவனும்...
ஒத்தக் கருத்தோடு காதல் உள்ளம் கலந்து
ஒருவர் அன்பினை ஒருவர் புரிந்து
சமத்துவ வாழ்க்கை வாழ்கிறோம்...
மானுட கெளரவத்தோடு...
எங்களை வாழவிடுங்கள் அமைதியாய்...
வாழ்ந்து காட்டுகிறோம் மேன்மையாய்...
முடிந்தால் காதலித்து வாழுங்கள்...
எங்களுக்கு இணையாய்...

உங்களை எதிர்ப்பதாய் நினைத்து
ஆணவக் கொலை செய்துவிடாதீகள்...!
பிடிக்காத வாழ்க்கையை அமைத்து வைத்து
வாழாவெட்டியாய் ஆக்காதீர்கள்!
குடும்பக் கெளரவம் அப்போதும் கெட்டுப் போகாதோ?

தோழர்களே...!
ஆண்மை உடைய
எந்த ஆண்மகனும்
விலைக்காக காத்திருப்பதில்லை!
வரதட்சணை சந்தையில்...

தோழிகளே...!
அன்பான ஒருவனுக்கு
ஓர் விலையை நிர்ணயித்து
அவனை - நீ
விலைமகனாய் ஆக்காதீர்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (20-Jul-16, 9:10 pm)
Tanglish : an magan
பார்வை : 250

மேலே