கொடை வள்ளல் வாழ்த்து
நூறாண்டு இருந்தருளும் காஞ்சிகாம கோடிபோல்
நூறாண்டு காணும் கலைத்தந்தை வாழியவே!
நூறுநூறு கோடி மாணவர்கள் நலம்பெறவே,
நீடுநீடு புகழெய்தும் தியாகராசர் வாழியவே!
மேருமேரு மலைபோல மேன்மையாவும் எய்திடவே,
கூறுகூறு மனமே கலைத்தந்தை புகழ்தினமே!
வீறுவீறு கொண்ட வள்ளல் தியாகராசர் போல்
ஆகஆக நினைவீர் ஆக்கமுண்டு உமக்கே!
பாருபாரு ‘தியாகராசர் பொறியியற் கல்லூரி’
காலகாலம் தழைக்கும் தொழிற்கல்வி துலக்கும்!
சீலசீலன் தியாகராசர் கனவுகண்ட கல்லூரி
மேலுமேலும் தழைக்கும் மேதினியும் புகழும்!
ஊழிஊழி நிற்கும் உத்தமரின் புகழ்நிற்கும்
ஆழிசூழ் உலகமெல்லாம் அண்ணல் புகழ்நிற்கும்.
– எழுதியவர்: இராம சோமன், நிலவியல் விரிவுரையாளர், தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை. ’கொடை வள்ளல் வாழ்த்து’ என்ற தலைப்பில் கல்லூரி 1992 – 93 ஆண்டு இதழில் வெளியான கவிதை.