அவ்வை பாட்டி வைத்தியம்
இறைவனுக்கும்
தமிழ் அமுதூட்டி அவ்வைப்பாட்டி என்றே
பெயர் கொண்டாள்!
அவள் கை அமுது உண்டுவிட்ட
மழலையென தமிழ்க்கடவுள் -ஏனோ
இன்று வருத்தம் என்றான்!
சிலந்தி வலையில் சிக்கிவிட்ட
காமப்பதராய் சில மனிதர் - அவர்கள்
காரும் உமிழ்நீரில் தீரா பிணிக்கொண்டு
இச் சமூகம் அழிந்திடுதே!
யாவரும் காணும் " நல்வழி "யை செந்தமிழால் அவ்வை வடித்தாளே
இப்பிணிக்கு மருந்தாய் அன்றே
அவள் உரைத்தாளே!
அச் செய்யுளில் வடியும் அழகிய தீயினிலே முறையற்ற காமம் தானாய் அழிந்திடுமே
அன்று மூதாட்டி விதைத்த விதையிங்கு மரமாய் வளர்ந்து காய்த்திடுதே
அதன் நிழலில் நலமாய் வாழ்ந்திடுவோம் !
நல்வழி வெண்பா படித்துணர்வோம்!