அம்மா கோண்டு - பத்து நொடி கதை

பாலு, ”நீ சரியான அம்மா கோண்டுவா ? இதை எதிர்பார்க்கல” ஆவேசத்தோடு சண்டை போட்டு வெளியேறி… அம்மா வீட்டுக்குள் நுழையும்போது, ரம்யாவின் காதில்…. ”தாலி கட்டி இருபத்தைந்து வருஷமாச்சு, இன்னும் அம்மா கோண்டாவே இருங்க” என்ற தன் அம்மாவின் பேச்சுகுரல் கேட்டதும், தன் வீட்டுக்கே திரும்பினாள்