அழகிய தமிழ் மகள் - கவிதை போட்டிIV

அழகிய தமிழ் மகளே! - என்
அருகில் வா திருமகளே.!
சிலை அருகில் இருந்தால்தானே
சிந்தனை வளரும்.
என்னருகில் நீ இருந்தால்தானே
ஏக்கம் தளரும்.
பஞ்சைப் போல் பறந்து வந்தேன்
உன்னை நாடி.
பக்குவமாய் அணைப்பாய்
என்னை தானடி
திரும்பும் திசை எல்லாம் உந்தன்
திருமேனி தெரியுதடி
திசை மறந்தப் பறவையாய்
பறக்கின்றேன் நானடி.
தீக்குச்சியாய் நீ உரசினாயடி - அதில்
தீப்பிடித்து எரியுது எனது இளமையடி
இலை விரித்தால் பந்தி உண்டு - நீ
நினைத்தால்
நமக்குள் சொந்தம் உண்டு.
புள்ளிகளை இணைக்குது கோலம்.
தள்ளி நின்று வாழ்கின்ற நம்மை
இணைக்க வேண்டும் காலம். - காதுக்கு
இனிமை தருவது
இசைகளின் ஸ்வரம் - கண்ணுக்குள் நீ
இருப்பதால் எனக்கு
வருகுது காதல் ஜுரம்.
காதலர்களாய் நாம் இருப்பதா? - இணைக்கும்
கல்யாணக் கோலத்தில் சேருவதா?
கண்ணே! - நான் காணும்
கனவுகளுக்கு நீதான் நிஜமடி
காத்திருக்கிறேன் எங்கே உன்மடி.
அழகிய தமிழ் மகளே! - என்
அருகில் வா திருமகளே.!

எழுதியவர் : ச.சந்திரமௌலி (24-Jul-16, 6:30 am)
பார்வை : 216

மேலே