காதில் பூ

பாதி மலர்விரிந்திருக்க
மீதி மலரையும் விரித்து
காதினில் வந்து ஒரு
சேதி சொன்னது தென்றல்
காதில் பூவாக உதவாதே
காதினருகே கன்னியர் கூந்தலில்
சோதிப் பூவாய் மட்டுமே அழகு செய் !

காதில் பூ இங்கே
எத்தனை எத்தனையடா
சாதிப்பூ மதப்பூ இனப்பூ மொழிப்பூ
எண்ணிலாப் பூக்கள் அரசியல்வாதிகளுக்கு
எண்ணி எண்ணி வைக்கிறான்
எண்ணாமலும் வைக்கிறான் !
இளிச்ச வாய் தமிழருக்கு
காது பெரிது
கேள்வி சிறிது !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jul-16, 9:13 am)
Tanglish : kaathil poo
பார்வை : 335

மேலே