அலை மீது காதல் கொண்ட கரை

நீ தொட்டு தொட்டு
போகும்போது
தொடர் அற்று
போனேன்....

நீ தொலைதூரத்தில்
வரும்போது,
என்னை தொட்டு
போக காத்திருந்தேன். ...

உன்னில் கிடைத்த
பொக்கிஷங்களை
என்னை தொடும்போது
கொண்டுவந்தாய்....

இதோ உன்னையும்,
என்னையும் பிரித்தவர்
எவரும் இல்லை. ....

இங்கு பிரிவது..... இனைவது......
நீயும் நானுமாக
இருந்தால். ....

வினோ. வி

எழுதியவர் : வினோ . வி (26-Jul-16, 7:08 pm)
பார்வை : 147

மேலே